ராமேஸ்வரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

nn

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ராமநாதபுரம் கோவிலில் வழக்கமாக இருக்கும் போலீஸ் பாதுகாப்பில் கூடுதலாக போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுபாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல் தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட கடல் பகுதிகளில் இந்தியக் கடற்படையினர் சார்பிலும் பாதுகாப்புப் பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, இரவுபகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ரயில் நிலைய நுழைவாயில் பகுதிகளிலும் பயணிகள்சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

police Rameswaram temple
இதையும் படியுங்கள்
Subscribe