Advertisment

சுமைதூக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்!

Heavy lifting workers in Trichy open a porridge tank with their families

திருச்சி மாவட்ட சி.ஐ.டி.யு லாரி புக்கிங் ஆபீஸ் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தினர், இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 'கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம்' நடத்தினர். சுமை பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராமர் தலைமையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜா, சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலாளர் ரெங்கராஜ் முன்னிலையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

Advertisment

திருச்சி காந்தி மார்க்கெட்டில் செயல்படும் லாரி புக்கிங் அலுவலகங்களில் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுவது வழக்கம். கடந்த வருடத்திற்கான கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் 18 முதலாளிகளில் 7 முதலாளிகள் 23% கூலி உயர்வை வழங்கினர். ஆனால் 11 முதலாளிகள் கூலி உயர்வு தர மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக ஏற்பட்ட விவாதத்தில் 9 சுமைதூக்கும் தொழிலாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில் வழக்கு போடப்பட்ட 5 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை தர மறுப்பு தெரிவித்த முதலாளிகளை கண்டித்தும்,கூலி உயர்வு கேட்டு போராடிய 5 சுமைப்பணி தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் எனவும், பேச்சுவார்த்தையை விரைந்து நடத்தி கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தோடு கஞ்சித் தொட்டி திறந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

struggle workers thiruchy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe