/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/w_4.jpg)
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.
அதேபோல், விழுப்புரம் மாவட்டத்திலும் கடுமையான பனிப்பொழிவு நிலவியதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "கடுமையான பனிப்பொழிவால் கொடைக்கானலைப் போல் காட்சியளிக்கிறது. இருப்பினும் வாகன ஓட்டிகள், சாலையில் நடந்துசெல்வோர்,உடற்பயிற்சி செல்வோர், அலுவலகத்திற்குச் செல்வோர் என அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்" என்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)