ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisment

 Heavy floods in Bhavani river, flooding in houses!

பில்லூர் அணையிலிருந்து 62,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் உப்பபள்ளம் என்ற இடத்தில் 50 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவிலுள்ள கபினி அணையிலுருந்து 90 ஆயிரம் கன அடியும், கபினி அருகே உள்ளதாரகாஅணையிலிருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீரும் எனமொத்தம் ஒரு லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. அதேபோல் கேஎஸ்ஆர் அணையிலிருந்து வினாடிக்கு 421 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Advertisment

கபினி அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருவதால்காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில்காவிரி கரையோர மக்கள் பாதுக்காப்பானஇடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.