Advertisment

நகர் மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க - தி.மு.க உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம்!

Heavy argument between ADMK and DMK members in the city council meeting!

Advertisment

விருத்தாசலம் நகராட்சியின் நகர்மன்ற உறுப்பினர்கள் அவசரக் கூட்டம்நகரமன்ற தலைவர்டாக்டர்சங்கவிமுருகதாஸ் தலைமையில், நடந்தது. துணைத் தலைவர் ராணி தண்டபாணி முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் சேகர் வரவேற்றார்.

கூட்டத்தில் மன்ற பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை வாசித்த போது நகர்மன்ற உறுப்பினர் சந்திரகுமார் (அ.தி.மு.க) மன்ற பொருட்களில் உள்ளகுறைகளைசுட்டிக் காட்டினார். அப்போது நகர்மன்ற ஆணையாளர் அடுத்து வரும் கூட்டங்களில் குறைகள் சரி செய்யப்படும்எனத்தெரிவித்தார்.

பக்கிரிசாமி (தி.மு.க) பேசுகையில், "இறைச்சி கழிவுகள் புறவழிச் சாலையில்கொட்டப்படுவதைத்தடுக்க வேண்டும்" எனவும், அன்பழகன் (திமுக) பேசுகையில், "பெரியார்நகர்பகுதியில் நவீன சுடுகாடுஅமைத்துதர வேண்டும்.செப்டிக்டேங்க்கழிவுகளைகழிவுநீர் கால்வாய்களிலும், திறந்த வெளியிலும் திறந்துவிடுவதைதடுக்க வேண்டும்" எனவும்,முத்துக்குமரன்(தி.மு.க) பேசும்போது," நகரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துபொதுமக்களுக்குகுடிநீர் விநியோகம் தங்கு தடையின்றி நடக்க ஏதுவாக மாரி ஓடையை உடனடியாக தூர்வாரி தடுப்பணை அமைக்க வேண்டும்,வெளியூர்களில் இருந்துவரும் பயணிகள் ரயில் நிலையத்திற்கு வழி தெரியாமல்தவிப்பதைபோக்கஜங்ஷன்சாலையில் ரயில் நிலையம் அறிவிப்பு பதாகை வைக்க வேண்டும்" எனவும், த.வா.க உறுப்பினர் பி.ஜி.சேகர் பேசும்போது, "விருத்தாச்சலம்அரசு மருத்துவமனையின் நிலைமை மிகவும் அவலமாக உள்ளது. போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகளை வலுக்கட்டாயமாக வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்புகிறார்கள். எனவே போதுமான மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனறார்.

Advertisment

ராஜேந்திரன் (அ.தி.மு.க) பேசும்போது, "விருதாச்சலத்தில் உள்ளஹோட்டல்களில்முன்புறம் அடுப்பு உள்ளதால் உணவு சமைக்கும்போதுமிளகாய்பொடி உள்ளிட்டகாரப்பொடிகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் எரிச்சலை உண்டாக்குவதால் விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதனால்உணவகங்களின்பின்புறத்தில் அடுப்புகளை வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் கோரினர்.இவற்றுக்குபதிலளித்துபேசிய நகர்மன்றத் தலைவர்சங்கவிமுருகதாஸ், " உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

சிங்காரவேல் (பா.ம.க) பேசும்போது, "குப்பை கழிவுகள் எங்கே கொட்டப்படுகிறது என தெரியவில்லை. வீதிகளில் ஆங்காங்கே கொட்டி எரிக்கப்படுகிறது. மணிமுத்தாற்றில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மணிமுத்தாற்றங்கரையில் உள்ள படிக்கட்டுகள் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். விருத்தாசலத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். தெப்பக்குளத்தை சீரமைத்து படகு குழாம் அமைக்க வேண்டும்" என்றார். அதற்கு ஆணையாளர், " குப்பை கழிவுகள் திடக்கழிவு திட்டத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பை என பிரித்து வீடு வீடாக சென்று சேகரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை உரம் தயாரிக்கும் கூடத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மீறி குப்பைகளை எரித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தொடர்ந்து சுயேட்சை உறுப்பினர் கருணாநிதி பேசும்போது, " பேருந்து நிலையத்தில் உள்ள தள்ளுவண்டி கடைகளுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி சிறு வாடகை வசூலித்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்" என பேசும்போது, அது சம்பந்தமாக விவாதம் நடந்து கொண்டிருந்த போது, திடீரென அ.தி.மு.க உறுப்பினர் ராஜேந்திரன் - தி.மு.க உறுப்பினர் பாண்டியன் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அ.தி.மு.க உறுப்பினர் சந்திரகுமார், ராஜேந்திரன் ஆகியோர், தி.மு.க உறுப்பினர் பாண்டியனிடம் ஒருமையில் பேசியதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க உறுப்பினர்கள், பா.ம.க உறுப்பினர் சிங்காரவேல் ஆகியோர், " தி.மு.க ஆட்சியில் நகர்மன்ற கூட்டத்தில் பாதுகாப்பு கிடையாது. அடுத்த முறை போலீஸ் பாதுகாப்புடன் தான் கூட்டத்தை நடத்த வேண்டும்" என்றனர். உடன் நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸிடம், தி.மு.க உறுப்பினர் ஒருமையில் பேசுவதாக முறையிட்டனர். அதற்கு டாக்டர் சங்கவி முருகதாஸ், " இனிமேல் இதுபோன்ற நடக்காது" என உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் கூட்டத்தை விட்டு வெளியேற, தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக கூறி நகர் மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் கூட்டத்தை முடித்து வைத்தார்.

திடீரென ஒருமையில் பேசியதாக கூறி அ.தி.மு.க, தி.மு.க உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பை ஏற்பட்டது.

admk viruthachalam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe