அக்னி நட்சத்திரம் முடிந்தும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது.

Advertisment

mirage

இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்றின் தாக்கம் அதிகமிருக்கும் இதனால் காலை 11 முதல் பிற்பகல் 3 மணிவரை யாரும் வெளியே செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாடுமுழுக்க வெப்ப தாக்கத்தால் பலர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.