Heartbeat for certified baby at Theni Hospital

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவுகுழந்தை பிறந்த நிலையில் குழந்தை இறந்ததாக கூறி பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் கொடுத்திருக்கிறது.இந்த குழந்தைக்கு இறுதிச்சடங்கு நடத்துவதற்காக மயானத்திற்கு கொண்டு செல்லும்போது குழந்தை உயிருடன் இருந்தது தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மருத்துவமனையின் மிகப்பெரிய அலட்சியப்போக்கு என்ற எதிர்ப்பு குரலும் எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம், தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த பிளவேல்ராஜா-ஆரோக்யமெரிதம்பதியினருக்கு மூன்றாவதாக குழந்தை பிறந்திருக்கிறது. ஆறுமாத குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தை இறந்ததாக கூறி மருத்துவமனை நிர்வாகம் தரப்பு இறப்பு சான்றிதழுடன் குழந்தையின் உடலையும் பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளது. சான்றிதழுடன் குழந்தையைமயானத்திற்கு தூக்கிச் சென்ற போது குழந்தைக்கு இதயத்துடிப்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் குழந்தையை வாளியில் போட்டு கொடுத்ததாக மருத்துவமனை நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல மணி நேரமாக மூடப்பட்டிருந்த வாளியில் அடைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு இதயத்துடிப்பு இருந்தது தெரியவந்தது அவர்களது பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது கானாவழக்குமருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் மருத்துவமனையின்டீன் தெரிவித்துள்ளார்.