ias

இந்தியாவில் கரோனாபாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மஹாராஷ்ட்ராமாநிலத்தின் நாக்பூரில் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

குஜராத்தின் நான்கு மெட்ரோ நகரங்களான அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட்டில்இன்றிலிருந்து(17.03.2021) 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்தியப் பிரதேசத்தில் கரோனாஅதிகரித்து வருவதைதொடர்ந்து, மக்கள் கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் இரவு நேர ஊரடங்குஅமல்படுத்தப்படும் எனஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும்கரோனாஅதிகரித்து வரும் சூழலில் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்பொழுது, “அரசியல், குடும்ப நிகழ்ச்சிகளால்தமிழகத்தில் கரோனா அதிகரிக்கும் நிலை உள்ளது.அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வோர்மாஸ்க் அணிவதில்லை. அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசியைஅனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கரோனாஉறுதி செய்யப்பட்டால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். தமிழகத்தில் கரோனா படிப்படியாக உயர வாய்ப்பிருக்கிறது. எனவே அனைவரும் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கரோனாதடுப்பு நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மாஸ்க் போடாவிட்டால் அபராதம் என்பதில் உள்நோக்கம் இல்லை. அபராதம் விதிக்கும்போதுதான் மக்கள் அதைப் பின்பற்றுகின்றனர்.”என்றார்.

Advertisment