health Secretary Radhakrishnan interview

தமிழ்நாட்டில் கரோனாஇரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கு முன்பு மாவட்டங்கள் வகை ஒன்று, இரண்டு, மூன்று என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுதளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், கரோனா மரணங்களை மறைக்கவில்லை என மருத்துவத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று (03.07.2021) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''கரோனா மரணங்களை தமிழக அரசு மறைக்கவில்லை, மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை.கரோனாஇறப்பைக் குறைத்துக் காட்டுவதாக கூறப்படுவது தவறு. தளர்வுகள் வழங்கப்பட்டாலும் பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளி போன்றவைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.