தமிழகத்தில் நாளை முதல் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா தடுப்பூசிகள் போடப்படவிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 166 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தடுப்பூசியை விஞ்ஞான ரீதியாக அணுக வேண்டும்; தடுப்பூசி போடுவதால் எந்த பின்விளைவும் இல்லை. தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் பழனிசாமி நாளை தொடங்கிவைக்கிறார். தடுப்பூசிகள் அனைத்து மாவட்டத்திற்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.