/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zsgdsfh.jpg)
தமிழகத்தில் நேற்று5,860 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 993 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 3,32,105 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமட்டும் சிகிச்சை பெற்று குணமாணவர்களின் எண்ணிக்கை 5,236 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,72,251 ஆக அதிகரித்துள்ளநிலையில்கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு செல்பவர்கள்பலருக்கு இதய பிரச்சனை, பக்கவாதம், ரத்தம் கட்டுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவது தெரிய வந்துள்ளதாகதகவல்கள் வெளியானது.
இதுகுறித்துதமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்கூறியுள்ளதாவது, கரோனா தொற்றியிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவர்களை கண்காணிக்க தனியாக மையங்கள் உருவாக்கப்படும். கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு சென்று திரும்பியவர்கள், பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு உள்ளானதுதெரிய வந்துள்ளது அவர்களுக்கு தீர்வு வழங்க ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புதியதாக ஒரு மையம் தொடங்கப்படும் எனதெரிவித்தார்.
மேலும், கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் 80 சதவீதம் பேர் எந்தவிதமான புகார்களையும் தெரிவிக்கவில்லை. பலருக்கு நிமோனியா, இதய பிரச்சனை, இரத்தம் கட்டுதல், பக்கவாதம் போன்ற உடல் பிரச்சினைகள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் குணமடைந்தவர்களைகண்காணிக்க மையங்கள் அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)