சென்னை கிங்ஸ் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 500 மருத்துவப் பணியாளர்களுக்கு 2 மாத காலத்திற்கு தேவையான மதிய மற்றும் இரவு உணவுகளை ஜியோ இந்தியா ஃபவுண்டேசன் நிறுவனம் இலவசமாக வழங்குகிறது.
இதன் தொடக்க விழாவானது இன்று (03-06-2021) மதியம்சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டு, உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். மேலும், ஜியோ இந்தியா ஃபவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் பிரியா ஜெமிமா, அறங்காவலர்கள் ஜியார்ஜ், டி.என். சந்தோஷ் குமார் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/schm-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/schm-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/schm-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/schm-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/schm-5.jpg)