Health Labs Laying Ceremony

Advertisment

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 4 கோட்டப் பகுதிகளிலும் தற்போது 18 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

மேற்கூறிய 18 சுகாதார நிலையங்களுக்கும் தலா இரு துணை நல மையங்கள் (Wellness Centre) மற்றும் இரு சுகாதார ஆய்வகங்கள் (Laboratory) தேசிய நகர்புற சுகாதார திட்டம் (NUHM) 2021-22ன் கீழ், 15வது நிதிக் குழு மான்ய நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் துணை நல மையங்கள் மற்றும் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆய்வகங்கள் மொத்தம் ரூ.9.44 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த உள்ளது.

Health Labs Laying Ceremony

Advertisment

இம்மையங்களில் யோகா மையம், நோயாளிகள் காத்திருப்பு அறை, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, மற்றும் கூடுதல் 3 அறைகள் ஆகியவை 843.62 ச.அடியில் அமைக்கப்படுகிறது. அதன்படி, மேற்கூறிய அனைத்து பணிகளையும் அடிக்கல் நாட்டும் விதமாக கருமண்டபம் பகுதி, தெற்கு தெருவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு பூமி பூஜை செய்து பணிகளை இன்று (24.01.2022) துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ முஜிபுர் ரகுமான், நகரப் பொறியாளர் எஸ்.அமுதவல்லி, செயற்ப்பொறியாளர் பி.சிவபாதம், உதவி ஆணையர் எஸ்.செல்வ பாலாஜி, முன்னாள் து.மேயர் மு.அன்பழகன் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.