Skip to main content

ஆள்குறைப்பு உத்தரவு... மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற சுகாதார ஆய்வாளர்!

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஆள்குறைப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்தவகையில்தான் 5 மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் என்ற நிலையை மாற்றி 50 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளரை நியமிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். இதிலும் நிலை ஒன்று, நிலை இரண்டு என இரு பிரிவுகளாக பணி செய்து வந்தனர். ஆனால் அரசு பதவி உயர்வு இல்லை, நிலை ஒன்று மட்டுமே என்கிறது. இப்படி அடுத்தடுத்த உத்தரவுகளால் தடுமாறிய தஞ்சை மாவட்ட சுகாதார ஆய்வாளர் ஒருவர் மனமுடைந்து தூக்கமாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்று தற்போது பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

medical

 

இது குறித்து தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தஞ்சாவூர் மாவட்ட துணை தலைவர்
த. அமுதவாணன் கூரியதாவது,

தமிழ்நாட்டில் 8000 க்கும் அதிகமான சுகாதார ஆய்வாளர்கள் தேவைப்படும் இடத்தில் 5700 பணி இடங்களாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அப்பணியிடங்கள் குறைக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி இன்னும் 334 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் 04.09.2019 முதல் 10.09.2019 வரை கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு காட்டப்படுகிறது. சட்ட ரீதியான முறையில் மேல்முறையீடு செய்யவும் இந்த ஆணை திரும்ப பெறவும் வலியுறுத்தியுள்ளோம். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்பபாட்டம் நடைபெறுகிறது. செப்டம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் சென்னை இயக்குனர் அலுவலகத்தில் 48 மணி நேரம் தொடர் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளோம்.

 

medical


இந்தநிலையில்தான் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி  (பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர்.) 2 ஆம் பகுதியில் பயிற்சி முடித்து 2014 ஆம் வருடம் பணியில் இணைந்தார். தஞ்சை மாவட்டம் , செருவாவிடுதி வட்டாரம் குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் இருந்தார். நேற்று மீண்டும் பணிக்கு திரும்பினார். பொருளாதார நிலையில் பின்தங்கிய அவர். அரசாணை 337 &  338 பற்றிய தகவலை அறிந்தவுடன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் சூழ்நிலையில் தனது குடும்ப எதிர் காலம் எப்படி அமையுமோ என்ற பயத்தில் இதுபோன்ற தவறான முடிவை எடுத்துள்ளார். தீவிர மருத்துவ  கண்காணிப்பில் உள்ளார். தொடர்ந்து அரசாங்கம் சுகாதார ஆய்வாளர்களை வஞ்சித்துகொண்டே இருக்கிறது. சுனாமி, கொள்ளை நோய், தானே புயல், கஜா புயல் இவை அனைத்திலும் எங்கள் பங்களிப்பு என்பது வார்த்தைகளால் சொல்ல கூடியதல்ல. அரசாணையை ரத்து செய்து மீண்டும் எங்கள் உரிமையை எங்களுக்கே அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி’ - முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
'Good news for govt employees' - CM M.K.Stalin action announcement

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித்திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைப்படுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2023 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வகையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 01.01.2024 முதல் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மருந்தகங்களுக்கு சென்னை ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Chennai Collector action order for pharmacies

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் - 1940 மற்றும் - 1945 அட்டவணை எக்ஸ் (X), எச் (H), எச்1 (H1) மற்றும் டிரக்ஸ் (Drugs) எனக் குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துக் கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் - 1973 பிரிவு 133இன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

இந்த உத்தரவை அமல்படுத்த தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது  உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.