jl

Advertisment

அரசு கல்லூரி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட மாணவிகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல பிரதேசம் தர்மசாலாவுக்கு அருகில் மாநில அரசுக்கு சொந்தமான முதுநிலை அரசுக் கல்லூரி ஒன்று உள்ளது. இதில் 1000க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரிக்கு அருகில் மாணவிகள் விடுதி ஒன்று உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு விடுதியில் மாணவிகள் இரவு உணவை சாப்பிட்டுள்ளார்கள். உணவு சாப்பிட்ட சிலருக்கு சாப்பிட்ட சில நிமிடங்களில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட 21 மாணவிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு ஒவ்வாமையே இந்த பாதிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.