/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-6_245.jpg)
பள்ளி மாணவனுடன் நெருக்கமாக தலைமையாசிரியர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் முருகமல்ல கிராமத்தில் உள்ள் அரசு பள்ளியில் தலைமையாசிரியராக புஷ்பலதா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவனுடன் நெருக்கமாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சிக்கபள்ளாப்பூருக்கு மாணவர்கள் ஆய்வுச் சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து போட்டோ ஷூட்டால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர், கல்வி அலுவலரிடம்புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் உமாதேவி பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து தலைமையாசிரியர் புஷ்பலதாவை பணியிடை நீக்கம் செய்து சிக்கபள்ளாப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இது குறித்து முழு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)