Advertisment

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமறைவு      

Headmaster misbehaves with school girls

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பெரிய வடகம்பட்டியில் அரசுத் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் காடையாம்பட்டியைச் சேர்ந்த சின்னராசு (59) என்பவர் தலைமை ஆசிரியராகப்பணியாற்றி வருகிறார். கடந்த அக். 19ம் தேதி காலையில் பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த 5ம் வகுப்பு பயிலும் சிறுமியின் சட்டைப் பையில், தலைமை ஆசிரியர் சின்னராசு கையை விட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதேபோல், அக். 26ம் தேதி காலையில் நடந்த வழிபாட்டுக் கூட்டத்தின்போதும் இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள்ஓமலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் தலைமை ஆசிரியர் சின்னராசு மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விவகாரம் காவல்துறை வரை சென்றதை அறிந்த சின்னராசு திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisment

headmaster police Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe