The headmaster of the government school tried to attack the district education officer!

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மேப்புலியூர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுபவர் சேகர். இவர், பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து திருநாவலூர் வட்டார கல்வி அலுவலர் முரளி கிருஷ்ணன் அப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது தலைமை ஆசிரியர் சேகர் பள்ளியில் இல்லை என வட்டார கல்வி அலுவலர் முரளி கிருஷ்ணா தலைமை ஆசிரியருக்கு 18 நாள் ஊதியத்தை நிறுத்தி வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் சேகர், இன்று திருநாவலூர் வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு சென்று அங்கு இருந்த வட்டார கல்வி அலுவலரை ஆபாச வார்த்தைகளால் திட்டி அவர் மேஜையில் இருந்த தொலைபேசியை அடித்து நொறுக்கியும் அங்கிருந்த பணிப் பதிவேட்டினை தூக்கி அவர் முகத்தில் வீசியும் உள்ளார். மேலும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து அங்கிருந்த ஆசிரியர்கள் அவரை மறித்து அங்கிருந்து வெளியேற்றினர்.