
கடந்த இரண்டு ஆண்டு காலமாக பெரும் நோய்த் தொற்றால் பலதரப்பட்ட தொழில்கள் முடங்கிப் போனாலும், கல்வி என்பது மிகவும் பின்தங்கிய நிலைக்குச் சென்றடைந்துள்ளது. அதிலும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக கூலி வேலைக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தாங்களாகவே முன்வந்து இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுக்கான கல்வியைக் கற்க வைப்பதில் பெரிதும் முயற்சி செய்துவருகிறார்கள்.
அதில், திருச்சி சோமரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நரசிம்மன், இடைநிற்றலால் கல்வி கற்க முடியாமல் தற்போது கூலி வேலைக்குச் செல்லும் மாணவர்களை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து படிப்பதற்கான நடவடிக்கையை செய்துவருகிறார். இதுவரை 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர் மீண்டும் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், அவருக்கு சக தலைமை ஆசிரியர்கள் பலரும் நேரிலும் தொலைபேசியிலும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
மேலும், சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதோடு, அவர்களைச் சந்தித்த அதே இடத்தில் பள்ளி சேர்க்கையையும் நடத்தி, மாணவர்களைப் பள்ளிக்கு மீட்டுவரும் பணியை செய்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)