A headless thrown body; Caught in a frenzy by drug addicts

பல வழக்குகளில் தொடர்புடைய 22 வயது இளைஞரைகடத்தி சென்ற மர்ம கும்பல் புதர் பகுதியில் கொலை செய்து தலையற்ற உடலை வீசி சென்றகொடூர சம்பவம் திருவள்ளூரில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (22 வயது). சரித்திர பதிவேடு குற்றவாளியாக வலம் வந்த ஸ்டீபன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் தற்போது வரை நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் ஸ்டீபன் வீட்டிற்கு காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரைக் கடத்திச் சென்றது.

Advertisment

தன்னுடைய மகனை நான்கு பேர் கடத்திச் சென்றதாக ஸ்டீபனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இருந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதலில் ஈடுபட்டபோது கைகளும், தலையும் வெட்டி நீக்கப்பட்ட நிலையில் உடல் ஒன்று கிடந்தது. அந்த உடல் கடத்தப்பட்ட ஸ்டீபனின் உடல் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை துரத்தி பிடிக்க முயன்ற நிலையில் போதையில் இருந்த இருவர் மட்டும் பிடிபட்டனர். பிடிபட்ட இருவரிடமும் எந்த காரணத்திற்காக ரவுடி ஸ்டீபன் கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரித்திர பதிவேடு குற்றவாளி போதை நபர்களால்கொடூர முறையில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment