மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்த தலைமை ஆசிரியர்! 

Head teacher who did hair cut for students!

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் உள்ள வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி மாணவர்கள் கடந்த வாரம் முதல் பள்ளிக்குச் செல்ல துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சேவியர் சந்திரகுமார், நேற்று பள்ளி வாயிலில் கையில் கத்தரிக்கோலுடன் நின்றுகொண்டு சீராக முடிவெட்டாத மாணவர்களுக்குமுடி திருத்தம்செய்து பள்ளிக்குள் அனுப்பினார்.அதேபோல மாணவர்கள் கைகளில் அணிந்திருந்த கயிறுகளையும் அகற்றினார்.

Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe