head master misbehaved with teacher in government school

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் பெரியமோட்டூர், பூனைக்குட்டி பள்ளம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளயில் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தலைமையாசிரியர் சுப்பிரமணி அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஆசிரியையை தலைமையாசிரியர் சுப்பிரமணி தனது அலுவலக அறைக்கு அழைத்துள்ளார். அதன்பேரில் அங்கு வந்த ஆசிரியைக்கு சுப்பிரமணி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை கத்தி கூச்சலிட்டபடியே தலைமையாசிரியர் அறையில் இருந்து வெளியேறினார்.

இதுகுறித்து ஆசிரியை தனது வீட்டில் இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார், தலைமையாசிரியர் சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.