head-on collision between a government bus and a private bus

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அரசு விரைவுப்பேருந்தும்தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisment

பெங்களூருவிலிருந்து பயணிகளுடன் சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்தும், சென்னையிலிருந்து பயணிகளுடன் பெங்களூரூவை நோக்கிச்சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்தும் வாணியம்பாடி பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

விபத்து நடந்தபோது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் நெடுஞ்சாலை ஊழியர்கள் பயணிகளை மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்டக் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்துள்ளனர்.