Advertisment

''நம்புங்க... சட்டையெல்லாம் கிழிச்சுகிட்டு தெருவுக்கு வரமாட்டோம்''-செல்லூர் ராஜு பேட்டி

n

'விளம்பரத்திற்காக எடப்பாடி பழனிசாமி சட்டையை கூட கிழிக்க மாட்டார்' என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Advertisment

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் 'சீக்கிரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட இருக்கிறது. வெளிநடப்பு நிரம்பிய சட்டப்பேரவையாக இருக்குமா? அல்லது ஆளுங்கட்சியை அலற வைக்கின்ற சட்டப்பேரவையாக இருக்குமா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

Advertisment

அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, ''ஆளுங்கட்சியை அலற... அதெல்லாம் கிடையாது. மக்கள் சார்ந்த பிரச்சனையை தான் அதிமுக முன்னெடுக்கும். அதிமுகவைப் பொறுத்த அளவிற்கு எங்களுடைய பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எப்பொழுதுமே மக்களுடைய பிரச்சனை தான் எடுத்துப் பேசுவார். தனிப்பட்ட பிரச்சனை பற்றி எதுவும் பேச மாட்டார். விளம்பரத்திற்காக சட்டையை கூட கிழிக்க மாட்டார். தெருவுக்கு எல்லாம் வர மாட்டோம். அதை நீங்கள் முழுமையாக நம்பலாம். நாங்கள் எடுத்து வைக்கின்ற வாதம் முழுக்க முழுக்க மக்கள் பிரச்சனையாக இருக்கும்'' என்றார்.

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe