guru pmk

சமூக நீதியின் போர்குரல் காடுவெட்டி குரு என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

Advertisment

வன்னியர் சங்க தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு அவர்கள் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி வேதனையளிக்கிறது.

வன்னிய சமுதாய மக்களின் போர்குரலாகவும், சமூக நீதி சார்ந்த கொள்கைகளில் சமரசமற்ற போராளியாகவும் திகழ்ந்தவர் என்ற அடையாளங்களோடு அவர் விடை பெற்றிருக்கிறார். மருத்துவமனையில் அவரை சென்று பார்க்க வேண்டும் என்று விரும்பிய போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் இருப்பதால், சந்திக்க முடியாமல் போய்விட்டது.

அவர் வன்னிய சமுதாய மக்களை தாண்டி பிற சமூக மக்களின் நலன்களுக்கும் குரல் கொடுத்தார். கல்வி, வேலைவாய்ப்பு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் அவரது பங்கும் முக்கியமானது.

Advertisment

அவரை இழந்து தவிக்கும் வன்னிய சமுதாய மக்களுக்கும், குடும்பத்தினருக்கும் மஜக வின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு கூறியுள்ளார்.