Skip to main content

பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்... பிரபல நடிகர் அதிரடி!

indiraprojects-large indiraprojects-mobile

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 85 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் இந்தவாரம் எவிக்சன் லிஸ்டில் உள்ளனர்.
 

big boss



மேலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் டாஸ்க்குகளில் எந்த போட்டியாளர் வெற்றி பெறுகிறரோ அவர் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வார் என்றும் பிக் பாஸ்ஸில் கூறியுள்ளனர். இந்த டாஸ்க்குகளில் தர்ஷன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இந்த நிலையில் சாண்டி, தர்ஷன், முகேன் மற்றும் கவின் ஆகியோர் இளைஞர்கள் என்பதால் பிக் பாஸ் கொடுக்கும் கஷ்டமான டாஸ்குகளை சமாளித்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக இருந்த சுஜா வருணித்தாவின் கணவர் சிவகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், முகென் ஒரு கறுப்புக் குதிரை என்றும் அவர் அமைதியாக பிக்பாஸ் டைட்டிலை கொத்திக் கொண்டு போகப் போகிறார் என்றும் என் இதயம் சொல்கிறது என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு பலரும் ஆதரவான கருத்தை தெரிவித்து வருகின்றனர். மக்கள் மத்தியில் தர்ஷன், முகேன் மற்றும் சேரன் ஆகிய மூவரில்  யாராவது ஒருவர் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆனால் மகிழ்ச்சி என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...