Advertisment

''துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும்''-வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்!

publive-image

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 70 ஆவது பிறந்தநாளிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்தும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது கட்சித் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களைச் சந்தித்தார். மேலும் அங்கு அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

Advertisment

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பெற்று-துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

vijayakanth dmdk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe