'' He forced the actress to have an abortion '' - Doctor's confession!

துணை நடிகையைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லிஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்துவிசாரணை துவங்கியுள்ளது.

Advertisment

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேற்று(29.06.2021) திடீரென புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். செங்கல்பட்டு சிறையில் அவருக்கு ஏசி என சகல வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் நேற்று திடீரென புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

'' He forced the actress to have an abortion '' - Doctor's confession!

Advertisment

அதனையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிகண்டனை அடையாறு மகளிர் போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விவகாரம் தொடர்பாக கோபாலபுரத்தைச் சேர்ந்த மருத்துவரிடம்அடையாறு மகளிர்போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் சேகரித்துவருகின்றனர்.

மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால்தான் நடிகைக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். அதேபோல் நடிகையின் முகத்தில் காயம் இருந்தபோது சிகிச்சை அளித்ததாகவும் போலீசிடம் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகையுடன் தென்மாவட்டத்தில் உள்ள பிரபல ஓட்டலில் மணிகண்டன் தங்கி இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 2 சாதாரண ஃபோன்கள்மட்டுமே கைப்பற்றப்பட்ட நிலையில் மணிகண்டனின் ஸ்மார்ட் ஃபோனை பறிமுதல் செய்ய போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.