'He Didn't Tell Me Anything' - Minister Duraimurugan Interview

திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜகவின் அண்ணாமலை பத்திரிகையாளர்களை ஆபாசமாக பேசுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

Advertisment

அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், 'பத்திரிகை என்பது நமக்கு லாலி பாடுவது அல்ல. அவர்கள் சில நேரங்களில் சில கருத்தை தெரிவிப்பார்கள். அது சில நேரம் நமக்கு சாதகமாக இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் பத்திரிகை உலகத்திற்கு யாராக இருந்தாலும் மதிப்பு தர வேண்டும். அது எங்களுடைய கொள்கை' என்றார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, 'அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்குமானால் அதை நான்வன்மையாகக் கண்டிக்கிறேன். கழகத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்' என்றார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும், பஞ்சாபில் ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளனர். இந்தியா கூட்டணி சார்பாக உங்களிடம் ஏதும் சொன்னார்களா? என்ற செய்தியாளர்களிடம், ''என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லை. அவர்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

Advertisment