kanimozhi sm

இந்து மத கடவுள்களை அவமதிக்கும் விதமாக பேசிவரும் கவிஞர் வைரமுத்து, திமுக எம்.பி. கனிமொழி, திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரும் வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ஆண்டாள் குறித்து கட்டுரை எழுதிய கவிஞர் வைரமுத்து, திருப்பதி கோவிலில் பணத்தை பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய திமுக எம்.பி.கனிமொழி; ராமாயணம் மற்றும் மனுதர்ம நூல்களை கொளுத்த வேண்டும் என எழுதிய திராவிட கழக தலைவர் கீ.வீரமணி ஆகியோர் இந்து மத கடவுள்களை இழிவடுத்தும் வகையிலும், மத நம்பிக்கைகளை குளைக்கும் வகையிலும் செயல்படுவதால் அவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் சிவசேனா மாநில தலைவரான ஜி.ராதாகிருஷ்ணன் ஜனவரி 16ஆம் தேதி புகார் அளித்தார்.

Advertisment

அந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையெனவும், நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்ததபோது, வழக்கு குறித்து காவல்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் வழக்கு மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.