“இத்தத்தண்டி நகைய போட்டுக்கிட்டு திருட வந்தியா...” - திருவிழா கூட்டத்தில் கைவரிசை; ரவுண்டு கட்டிய மக்கள்

publive-image

மதுரை மாவட்டம் மேலூரில் கோவில் திருவிழா கூட்டத்தில் தங்க நகையைப்பறிக்க முயன்ற பெண் ஒருவரை ரவுண்டு கட்டிய பெண்கள் சரமாரியாகக்கேள்வி எழுப்பியது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு என்ற பகுதியில் இன்று நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்பொழுது கூட்டத்தில் புகுந்த பெண் ஒருவர் பெண்களிடம் நகையைத் திருட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த பெண்கள் அவரை இழுத்து வந்து ஒரு பகுதியில் அமரவைத்து சுற்றி நின்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். ''கழுத்துல 10 பவுனுக்கு இவ்ளோ பெரிய செயின் போட்டு இருக்கியே. இத்தத்தண்டி நகைய போட்டுகிட்டு திருட வந்திருக்கியே' எனத்திட்டியுள்ளனர். தற்போது இந்த வீடியோசமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நகையை வெட்டுவதற்கு அந்த பெண் எடுத்து வந்த கருவியை அவரது கையிலே கொடுத்து புகைப்படம் எடுத்த அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Festival jewelry loot madurai
இதையும் படியுங்கள்
Subscribe