Advertisment

பேட்டியை முழுதாக பார்க்கவில்லை; தினகரனை சந்தித்தது கடந்த காலம்- ஓபிஎஸ்

தினகரனை சந்தித்ததுதொடர்பாகதங்க தமிழ்செல்வன் கொடுத்தபேட்டியை முழுதாக பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

ops

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பழனிசாமி ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக பன்னீர்செல்வம், டிடிவி தினகரனின் நண்பரிடம் தினகரனை சந்திக்கநேரம் கேட்டார், சென்ற ஆண்டு அதாவது 2017 ஜூலை 12ம் தேதி கோட்டூர்புரம் பில்டர் இல்லத்தில் தினகரனை சந்தித்து பேசினார் பன்னீர்செல்வம். அப்போது அவர் பழனிசாமியை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு ஆட்சியை மாற்றுவோம்என கூறியதாகதங்க.தமிழ்செல்வன் தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின்போது கூறியுள்ளார். மேலும் இதற்குஆதாரம் உள்ளது என்றும் கூறியுள்ளார். தேர்தல் நெருங்கவிருக்கும் இந்நிலையில் இவ்வாறு கூறியிருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில் இன்று திருச்சிவிமான நிலையத்திற்கு வந்த துணைமுதல்வர் ஓபிஎஸ்ஸிடம் இது தொடர்பான கேள்வியை செய்தியாளர்கள் முன்வைக்கையில், தங்க தமிழ்செல்வன் இதுபற்றி பேசிய பேட்டியை நான் முழுதாக பார்க்கவில்லை. முழுதாக பார்த்துவிட்டு விளக்கமளிக்கிறேன் என கூறினார். மேலும் தினகரனை சந்தித்தது கடந்த காலம் எனவும் கூறினார்.

Thanga Tamil Selvan meetings ops admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe