Advertisment

'தி.மு.க. மகளிரணி நாளை பேரணி'- மு.க.ஸ்டாலின்!

HATHRAS WOMEN INCIDENT DMK PARTY MK STALIN

ஹத்ராஸ் இளம்பெண் வன்கொடுமையைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தி.மு.க. மகளிரணி பேரணி நாளை (05/10/2020) நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் இளம்பெண் வன்கொடுமையைக் கண்டித்து நாளை (05/10/2020) மாலை 05.00 மணிக்கு தி.மு.க. மகளிரணி சார்பில் எம்.பி. கனிமொழி தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடைபெறும். இந்த பேரணியில் மகளிரணியினர் திரளாக பங்கேற்க வேண்டும். ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும்; ராகுல் காந்தியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அராஜகத்தின், சர்வாதிகாரத்தின், எதேச்சதிக்காரத்தின் ஆட்சி உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுகிறது. ராகுல் மீதான அவமதிப்பு நிகழ்வுகள் நாடாளுமன்ற உரிமைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நாம் ஏற்றும் ஒளி, தவறுகளுக்கு எதிரானதை எரிக்கட்டும்; இந்தியா முழுவதும் போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்றட்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கிண்டி ராஜீவகாந்தி சிலையில் இருந்து ஆளுநர் மாளிகை வரையிலான பேரணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

hathras mk stalin rally
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe