hathras dmk womens rally guindy police station

சென்னையில் தடையை மீறி பேரணி நடத்தியதாக தி.மு.க.எம்.பி. கனிமொழி, கீதாஜீவன் எம்.எல்.ஏ. உட்பட 191 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக கூடுதல், தொற்று நோயைப் பரப்பக்கூடிய செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

hathras dmk womens rally guindy police station

ஹத்ராஸில் நிகழ்ந்த இளம்பெண் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து தி.மு.க. மகளிரணி சார்பில் நேற்று (05/10/2020) மெழுகுவர்த்தி ஏந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இருப்பினும் பேரணி பாதியிலேயே தி.மு.க. எம்.பி., கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.வினரை காவல்துறையினர் கைது செய்து, பின்னர் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment