Skip to main content

சிறுமி ஹாசினி கொலை வழக்கு- ஒரு வருடமாக நடந்தது என்ன?

Published on 19/02/2018 | Edited on 19/02/2018

இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு, சிறுமி ஹாசினி கொலை வழக்கு. பிப்ரவரி 2017ல் ஆரம்பித்த இந்த வழக்கிற்கு பிப்ரவரி 2018ல் தீர்ப்பு வந்துள்ளது. இந்த ஒரு வருடத்தில் நடந்தது என்ன?

hasini, dhasvanth
  • பிப்ரவரி 6, 2017 அன்று சென்னை போரூர் அருகே முகலிவாக்கத்தில்  வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஹாசினி காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது.
  • அதன்பின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீஸ் விசாரித்தபோது தஸ்வந்த் பிடிபட்டான்.
  • சிறுமி ஹாசினியை தான்தான் கொலைசெய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக ஒப்புக்கொண்டான்.
  • தஸ்வந்த் புழல் சிறையில் அடைப்பு 
  • குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதன் அடிப்படையில் ஜாமீனில் வெளிவந்தான்.
  • 2017 டிசம்பர் 2 அன்று தனது தாய் சரளாவை பணம் கொடுக்கவில்லை என்பதற்காக கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்றான்.
     Dhaswanth arrested in mumbai
     
  • மும்பையில் தார்டியோ என்னும் இடத்தில் தனிப்படை போலீசார் பிடித்தனர். அங்கிருந்து தப்பியோட முயற்சித்தான்.
  • தாயாரை கொன்ற குற்றத்திற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான்.
  • பிப்ரவரி 19 (இன்று) ஹாசினியை கொன்ற வழக்கில் தஸ்வந்திற்கு 48 ஆண்டுகள் சிறை தண்டனையும், சாகும்வரை தூக்கில் போடவும் தீர்ப்பளித்துள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றம்.

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஸ்வந்த் தூக்கு தண்டனைய உறுதிசெய்தது உயர்நீதிமன்றம்!

Published on 10/07/2018 | Edited on 10/07/2018


சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி குற்றவாளி தஷ்வந்த் மேல்முறையீடு செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை உறுதி செய்தது.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த பாபு என்பவரின் 6 வயது மகள் ஹாசினி, 2017ல் பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று காணாமல் போனார். இது குறித்து மாங்காடு போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அதே குடியிருப்பில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற வாலிபர், அந்த குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்து, கொலை செய்ததும், பின்னர் காட்டிற்குள் எடுத்து சென்று எரிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து தஷ்வந்தை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். ஆனால் சில மாத சிறைவாசத்துக்குப் பிறகு, தஷ்வந்த் ஜாமினில் வெளியே வந்தார். ஜாமினில் வெளியே வந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். பின்னர், அவர் மும்பையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

 

 

இந்த கொலை வழக்கு செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தஷ்வந்துக்கு தூக்குதண்டனையை விதித்து, கடந்த பிப்ரவரி 19-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.

தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், தூக்குத் தண்டனையை ரத்து செய்து, தன்னை விடுவிக்க வேண்டுமென தஷ்வந்த் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாகிய இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், தஸ்வந்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்து, தஸ்வந்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

Next Story

தஷ்வந்தின் தலையெழுத்தைத் தீர்மானித்த சாட்சியமும், தடயங்களும்!

Published on 21/02/2018 | Edited on 22/02/2018

தமிழகத்தையே உலுக்கியது சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஹாசினியின் மீதான பாலியல் வன்கொடுமையும், படுகொலையும். கடந்த ஆண்டு பிப்ரவரி  6ஆம் தேதி நடைபெற்ற இந்தப் படுகொலையில், அதே பகுதியைச் சேர்ந்த தஷ்வந்த எனும் இளைஞர் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பின் காவல்துறையின் அலட்சியத்தால் ஜாமீனில் வெளிவந்தார். 

 

பின்னர் டிசம்பர் 2ஆம் தேதி பணத்திற்காக தன் தாய் சரளாவைக் கொன்றுவிட்டு மும்பையில் தலைமறைவான தஷ்வந்த் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். கடந்த ஒரு வருடமாக தஷ்வந்த் மீதான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், பிப்ரவரி 19ஆம் தேதி தஷ்வந்திற்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது செங்கல்பட்டு நீதிமன்றம். இந்த வழக்கில் தஷ்வந்தின் தலையெழுத்தைத் தீர்மானித்த சாட்சியங்களும், தடயங்களும் இதோ..

 

Dasw

 

கடந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் 6.15 மணி வரை ஹாசினி குடும்பம் வசிக்கும் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில், தஷ்வந்த் மற்றும் அவரது நாயுடன் ஹாசினி விளையாடிக் கொண்டிருந்ததை அதே குடியிருப்பில் வசிக்கும் முருகன் என்பவர் பார்த்திருக்கிறார். மொட்டை மாடியில் காய்ந்து கொண்டிருந்த துணியை எடுப்பதற்காக சென்றபோது, இதைக் கண்ட முருகன் அந்த சமயத்தில் ஹாசினி வீட்டில் யாரும் இல்லை என்பதையும் கவனித்திருக்கிறார். முருகனின் இந்த ‘கடைசியாக பார்த்த சாட்சியம்’ ஹாசினி கொலை வழக்கில் முக்கிய சாட்சியமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

 

கொலை செய்யப்பட்ட பிறகு ஹாசினியின் உடல் எரிக்கப்பட்ட நிலையில், அது ஹாசினிதானா என்று உறுதிப்படுத்த வேண்டி இருந்தது. தடயவியல் துறையில் பணிபுரியும் அறிவியல் அதிகாரி புஷ்பாராணி, சூப்பர் இம்பொஷிசன் எனப்படும் மேல்பதித்தல் முறையைப் பயன்படுத்தியிருந்தார். ஹாசினியின் புகைப்படம் மற்றும் எரிந்த நிலையில் இருந்த உடலின் தலை இரண்டையும் ஒப்பிடும்போது அது ஹாசினி என்பது உறுதியானது.

 

சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட உள்ளாடையில் இருந்த விந்துவின் டி.என்.ஏ. மாதிரி, தஷ்வந்தின் ரத்தத்தில் உள்ள டி.என்.ஏ. மாதிரியோடு ஒத்துப்போனது. இதனை தடயவியல் துறையில் உள்ள ஆய்வக அதிகாரி நிர்மலா பாய் உறுதி செய்தார்.

 

அறிவியல்பூர்வமான இந்த சாட்சியங்கள் ஒருபுறம் இருக்க, சட்டரீதியிலான சாட்சியங்கள் காவல்துறை தரப்பில் இருந்து திரட்டப்பட்டது. தொடர்ந்து தன் மீதான குற்றச்சாட்டுகளை தஷ்வந்த் மறுத்துவந்தார். ஆனாலும், அவர்மீதான சந்தேகம் துளியும் குறையவில்லை. சிசிடிவி ஆதாரங்கள் தஷ்வந்த் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்த, தற்போது அவர் குற்றவாளி என்பது நிரூபணமாகி இருக்கிறது.

 

46 ஆண்டுகள் சிறைதண்டனையும், சாகும் வரை தூக்கில் போடவும் உத்தரவிட்டு, இந்த வழக்கில் தீர்ப்பளித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், ‘இப்படியொரு தீர்ப்பை வழங்காவிட்டால் சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவார்கள்’ எனக் குறிப்பிட்டார். இரண்டு கொடூரமான கொலைகளுக்கு இத்தனை பெரிய தண்டனை தேவைதான் என சொல்லப்படுகிறது. பாலின சமத்துவத்தும் மிக்க சமூகத்தை உருவாக்குவதை விடவா தண்டனைகள் தவறுகளைக் குறைக்கப் போகின்றன?