mgr

தமிழகம் வரும் சசிகலா, சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் தோட்டம் அருகே கொடியேற்றத் தடை கோரிஉயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது.அமமுக சார்பில்சசிகலாகொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சசிகலா கொடியேற்றுவதற்கான கம்பம்நடுவதற்கும், பேனர்கள்வைப்பதற்கும்தடை விதிக்கக் கோரிஎம்ஜிஆரின் வளர்ப்பு மகள்கள்உயர்நீதிமன்றத்தில் கடந்த5ஆம்தேதிமுறையீடு செய்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில் அந்த வழக்கில், சசிகலாவை வரவேற்க சென்னை ராமவாரத்தில் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டுவிட்டதா என சரிபார்த்து தெரிவிக்கும்படி எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்கள் கீதா, ராதா ஆகியோருக்குசென்னைஉயர்நீதிமன்ற அறிவுறுத்தியுள்ளது. நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால்கொடிக் கம்பம் அகற்றப்பட்டுவிட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசும், அமமுக நிர்வாகி லக்கி முருகனும் பதில் தர நீதிபதிகள்உத்தரவிட்டு, வழக்கை பிப்.11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.