Advertisment

விரைவில் வெளியாகிறது, மாவட்ட எஸ்.பிக்களின் இடமாற்ற உத்தரவு? 

Has District SPs Action Transfer Directive?

Advertisment

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று மேலும், மேலும் அதிகரித்துக்கொண்டு வரும் சூழ்நிலையில், தமிழக அரசு வழக்கம்போல் தனது நிர்வாக செயல்பாட்டை நடத்திவருகிறது. இதன்ஒரு பகுதிதான் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் எனப்படும் போலீஸ் எஸ்.பிக்கள் டிரான்ஸ்பர் பட்டியல். இதைதமிழக அரசு தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள எஸ்.பிக்களின் பட்டியலை எடுத்து அவர்கள் ஏறக்குறைய இரண்டு, மூன்றுவருடங்களுக்கு மேல் ஒரேமாவட்டத்தில் பணியாற்றி இருந்தால் அவர்களை மாறுதல் செய்யலாம் என அரசு முடிவு எடுத்து, அதற்கான உத்தரவை ஓரிருநாளில் பிறப்பிக்க உள்ளதாகவும்,இதன்படி தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட எஸ்.பிக்கள் 11 பேரைஅதிரடியாக டிரான்ஸ்பர் செய்ய உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நேரடி கண்காணிப்பில்எஸ்.பிக்கள் இடமாற்றம் நடக்கிறது.

Tamilnadu corona virus police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe