கரோனா அச்சத்தில் மக்கள் வெளியில் வராமல் இருந்த சூழ்நிலையில் காலையில் இருந்து மதியம் 1 மணிவரை காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்கிக்கொள்ள அனுமதி இருந்த நிலையில் கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் இருந்து அரூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, கணவன் மனைவி இருவரும் தொட்டம்பட்டி அருகே டெம்போ வாகனம் வந்தால் தீடிரென விபத்தில் சிக்கினர். இதைத்தொடர்ந்து வழியில் பயணம் செய்த அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார் உடனடியாக நேரில் விபத்தில் சிக்கியவரை முதல் உதவி கொடுத்து அவருடைய வாகனத்தில் ஏற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.