நாடார் சமுதாயத்தின் பிரபலமான புள்ளியாக இருந்தவர் ராக்கெட் ராஜா. அவர் தற்போது பனங்காட்டுப்படை கட்சியை துவக்கி அதன் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், இன்று அவரது கிராமமான நெல்லை மாவட்டத்தில் இருக்கும் திசையன்விளை அருகில் உள்ள ஆனைகுடி கிராமத்திற்கு வந்தார். அவருடன் அவரது அமைப்பினர் உள்ளிட்ட வர்களோடு ஹரிநாடாரும் வந்திருந்தார்.

r

Advertisment

இன்று இரவு 7 மணி அளவில் செய்தியாளர்களிடம் பேசிய ராக்கெட் ராஜா, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக தன் கட்சியின் சார்பில் பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரிநாடார் என்பவர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவித்தார். இந்த ஹரிநாடார் நெல்லை மாவட்டத்தின் தேவர்குளம் அருகில் உள்ள மேல இழந்தைகுளத்தை சேர்ந்தவர். சென்னையில் தொழிலதிபராக உள்ளார்.

Advertisment

rrrr