Skip to main content

வணக்கம் அர்ஜூன் ரெட்டி தம்பி... -ஹர்பஜன்

Published on 05/10/2018 | Edited on 05/10/2018

நோட்டா படம் இன்று வெளியாகியுள்ளது, இந்தப்படம் வெளியாவதை முன்னிட்டு பல யூ ட்யூப் சேனல்களுக்கு பேட்டியளித்திருந்தார் விஜய். புட் சட்னி என்ற சேனலில் ஹர்பஜன்  புகைப்படத்தை திருவள்ளுவர் போன்று போட்டோஷாப் செய்யப்பட்டு இருக்கும். அதை வணங்கி நிகழ்ச்சியைத் தொடங்குவார்கள். இந்த வீடியோவைப் பார்த்த ஹர்பஜன் அதுகுறித்து ட்வீட் போட்டுள்ளார். அவரது ட்வீட்,

 

வணக்கம் அர்ஜுன் ரெட்டி எப்பிடி இருக்கீங்க தம்பி இப்போ தான் வீடியோ பாத்தேன் உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து போய்ட்டேன் இந்த பேரு, புகழ் எல்லாம் தமிழ் மக்கள் குடுத்தது வாழ வைக்குற தெய்வம்   உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துக்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக வெற்றிக் கழகம் நாளை முக்கிய ஆலோசனை!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Tamilaga Vettri Kazhagam important meeting tomorrow

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான் அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்றும் தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறி தற்போது வரை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“தோனியை விட அதிக ரன்களையும் விக்கெட்களையும் எடுத்திருக்கலாம்; ஆனால்...” - ஹர்பஜன் சிங் 

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

“Could have taken more wickets than Dhoni; But...”- Harbhajan Singh

 

16 ஆவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அணிகள் தொடர் வெற்றிகளைப் பெற கடுமையாகப் போராடி வருகின்றன. 

 

கடந்த சீசன்களைப் போலவே இந்த சீசனிலும் சென்னை அணியின் கேப்டன் தோனி, அனைத்து அணிகளையும் அணி வீரர்களையும் விஞ்சி ரசிகர் பட்டாளத்துடன் தொடரின் நாயகனாக திகழ்கிறார். முன்னாள் வீரர்களும் பயிற்சியாளர்களும் தோனியைப் புகழ்ந்து வரும் நிலையில் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரும் சென்னை அணியின் முன்னாள் வீரருமான ஹர்பஜன் சிங், தோனியை புகழ்ந்துள்ளார்.

 

தனியார் கிரிக்கெட் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஹர்பஜன் சிங், “தோனியை விட பெரிய கிரிக்கெட் வீரர் இந்தியாவில் இருக்க முடியாது. அவரை விட யாரோ ஒருவர் அதிக ரன்கள் எடுத்திருக்கலாம்; அவரை விட அதிக விக்கெட்டுகளை எடுத்திருக்கலாம்; ஆனால் அவரை விட பெரிய ரசிகர் பட்டாளம் யாருக்கும் இல்லை. தோனி இந்த ரசிகர்களை மனதார ஏற்றுக்கொண்டார். அவர் தனது சக வீரர்களையும் மதிக்கிறார். அவர் மிகவும் அன்புடனும் உணர்ச்சியுடனும் நடந்துகொள்கிறார். தோனி இந்த அன்பையும் உணர்ச்சியையும் 15 ஆண்டுகளாக தனது இதயத்தில் சுமந்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

 

தொடர்ந்து ஷிவம் துபேயின் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், “ஷிவம் துபேயின் ஹிட்டிங் ரேஞ்ச் அபாரம். தவறான பந்துகள் எப்போதெல்லாம் வீசப்படுகிறதோ அதை பெரிய ஷாட்களாக மாற்றுகிறார். இத்தகைய குணங்களைக் கொண்ட வீரர்கள் மீது சிஎஸ்கே அதிக கவனம் செலுத்துகிறது. ஷிவம் துபே தொடர்ந்து டாப் ஆர்டரில் பேட் செய்வதற்கான வாய்ப்புகளைப் பெற வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.