திருமண நிகழ்வில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் இளைஞர் கைது

nn

விழுப்புரத்தில்16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது தாய், தந்தையுடன் விழுப்புரம் மாவட்டத்திற்கு உறவினரின் வீட்டு இல்ல திருமண விழாவிற்கு சென்றுள்ளார். இந்த திருமண விழாவில் விழுப்புரம், வாட்டர் டேங்க் வீதியைச் சேர்ந்த சேர்ந்த இளந்தமிழன் (26) என்பவரும் பங்கேற்று கலந்து கொண்டார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் திருமணத்திற்கு வந்திருந்த ஈரோடு சிறுமியிடம் இளந்தமிழன் பேச்சுவார்த்தை கொடுத்து நெருங்கி பழகி உள்ளார்.

பின்னர் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திருமண விழா முடிந்து ஈரோடு திரும்பிய 16 வயது சிறுமி தனது தாய் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஈரோடு அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட பின்பு விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இழந்தமிழனை கைது செய்து ஈரோடு அழைத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து இழந்தமிழனிடம் விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Erode harassment marriage POCSO police
இதையும் படியுங்கள்
Subscribe