Advertisment

தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை; தாளாளரை கைது செய்ய பெற்றோர்கள் போராட்டம்

harassment of student in private school; Parents protest to arrest the teacher

சென்னை திருநின்றவூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பள்ளித் தாளாளர் வினோத் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் திருநின்றவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Advertisment

திருநின்றவூர் காவல்துறையினர் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை ஏற்காததால் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருநின்றவூர் காவல்துறையினர் பெற்றோரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

Advertisment

பேச்சுவார்த்தையில் பெற்றோருக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவியிடம் தவறாக நடந்த வினோத் போக்சோசட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்றும், வினோத் வரும்வரை இவ்விடத்தை விட்டு நகரப்போவதில்லை என்றும் கூறினர்.

இதனைத்தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவிகளும் கோஷங்களை எழுப்பி உள்ளிருப்பு போராடத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

school
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe