Advertisment

மாணவிக்கு பாலியல் தொல்லை; கல்லூரி முதல்வர் மீது வழக்குப் பதிவு

harassment of a student; Case registered against college principal

சென்னை உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் ரீதியானதொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

சென்னை நந்தனத்தில் செயல்படும் உடற்கல்வியியல் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் மாணவி ஒருவருக்கு கல்லூரியில் முதல்வராக பணிபுரியும் ஜார்ஜ் ஆபிரகாம் பாலியல் ரீதியானதொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisment

இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாணவி சைதாப்பேட்டை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் மாணவிக்கு செல்போன் மூலமாக ஜார்ஜ் ஆபிரகாம் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். மேலும் கடந்த 3 மாதங்களாகவே தனது செல்போனிற்கு தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆதாரங்களையும் மாணவி காவல்நிலையத்தில் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. புகாரின் உண்மைத் தன்மை குறித்த விசாரணையும் நடைபெறுவதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்தப் புகார் தொடர்பாகக்கல்லூரி முதல்வர் மீதுவன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

college principal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe