தூத்துக்குடியில் மின்நிலைய அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளநிலை பொறியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் துணை மின்நிலைய அலுவலகத்தில் மதுரையைசேர்ந்த கண்ணன் என்பவர் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அலுவலகத்தில் தனியாக பணியாற்றிக்கொண்டிருந்த பெண் ஒருவரை பொறியாளர் கண்ணன் தவறான எண்ணத்துடன் அணுகி அவரை கட்டிப்பிடிக்க முயன்றுள்ளார். அவரின் பிடியில் இருந்து தப்பிய அந்த பெண் அலறி அடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து மின்நிலைய அலுவலகத்திற்கு சென்ற போலீசார் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்ட கண்ணனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை நிகழ்ந்தது உண்மை என தெரியவந்த நிலையில் இளநிலை பொறியாளர் கண்ணனை போலீசார் கைது செய்தனர்.