harassment on a moving train; North State youth arrested

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞரை ஈரோடு சந்திப்பில் வைத்து போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புனேவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில் இளம்பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். சேலத்தில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்த அந்த பெண் சொந்த ஊர் செல்வதற்காக ரயிலில் ஏறிய பொழுது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மதாப் சர்கார் என்ற இளைஞர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக மின்னஞ்சல் மூலமாகவும் டிக்கெட் பரிசோதரிடமும் இளம்பெண் புகார் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து ரயிலானது ஈரோடு சந்திப்புக்கு வந்த பொழுது புகார் எழுந்த பெட்டிக்கு சென்ற ரயில்வேபோலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுக்கப்பட்டது உண்மை என தெரிந்த நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மதாப் சர்கார் என்ற அந்த இளைஞரை கைது செய்தனர்.