
கிருஷ்ணகிரியில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வீட்டிற்கு அருகே உள்ள மறைவான இடத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மாரியப்பன் என்ற நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. பெண்ணின் கூச்சலால் அங்கிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து மாரியப்பனை பிடித்து தர்மஅடி கொடுத்து காவல்துறையில் ஒப்படைத்தனர். மாரியப்பன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி பெண் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
Follow Us