Advertisment

அரசு விடுதி மாணவிகளிடம் சேட்டை! கல்லூரி மாணவன் உள்பட4 பேர் கைது!!

harasments to girl students! 5 people including a college student were arrested!!

Advertisment

பழனி சத்யாநகர்பகுதியில் உள்ள பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளனர்.

விடுதிமாணவிகளுக்குக்கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாவட்ட குழந்தைகள்நலப்பாதுகாப்புத்துறையில் உள்ள அதிகாரிகள், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால்தங்களைதொடர்பு கொள்ளலாம் கூறி தொடர்புஎண்களைகொடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் சில தினங்கள் முன்பு அதிகாரிகள் கொடுத்ததொலைப்பேசிஎண்ணைதொடர்பு கொண்டு மாணவிகள் சிலபுகார்களைத்தெரிவித்துள்ளனர். மாணவிகள் கொடுத்த தகவல் மற்றும் புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

அப்போது விடுதியில் தங்கியுள்ள பள்ளி மாணவிகள் சிலர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட குழந்தைகள் காப்பகம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் பழனி சத்யாநகரைசேர்ந்த கிருபாகரன், ராகுல், பரந்தாமன் மற்றும் 18 வயதான கல்லூரி மாணவன் ஒருவர் உட்பட 4பேரைப்பழனி அனைத்து மகளிர் போலீசார்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஆதிதிராவிடர் விடுதியில் அலட்சியமாகபணிபுரிந்ததாககூறி விடுதி காப்பாளர் அமுதா மற்றும் விடுதி காவலாளி விஜயா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

Palani
இதையும் படியுங்கள்
Subscribe