Happy; Thank you! - K veeramani report !!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

நேற்று நடத்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் பெரியார் பெயர் தவறாக சமூக குறியீட்டோடு அச்சிடப்பட்டிருந்தது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வருத்தம் தெரிவித்த நிலையில் அதுகுறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

Advertisment

தமிழ்நாடு பப்ளிக் சர்வீசு கமிசன் - குரூப்-2 கேள்வித் தாளில் தந்தை பெரியாரைப்பற்றிக் குறிப்பிடுகையில் இ.வெ.ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிட்ட விஷமம் - அறியாமைபற்றிச் சுட்டிக்காட்டி கண்டனங்கள் எழுந்ததையொட்டி, தமிழ்நாடு பப்ளிக் சர்வீசு கமிசன் அமைப்பு தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதற்கும், அப்படிக் கேள்வி கேட்கும் தேர்வாளர்களை இனி அப்பணிக்கு தகுதியற்றவர்கள் என்பதால், அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளதற்கும் திராவிடர் கழகம் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறது.

இதனை உடனடியாகச் சுட்டிக்காட்டி, கண்டித்த தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், மற்ற ஊடகங்களுக்கும் திராவிடர் கழகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என கூறியுள்ளார்.

Advertisment