அண்மையில் திருமணமான நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார்கள். இந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்திருக்கலாம் என தகவல் வெளியான நிலையில் அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சட்ட விதிமுறைகளை மீறி இருவரும் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக தொடர்ந்து விமர்சனம் எழுந்து வந்தது.
இந்நிலையில் விக்கி- நயன் தாம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லும் வீடியோ ஒன்றை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் கையில் குழந்தைகளை தூக்கிக்கொண்டபடி நின்றுகொண்டு '' அனைவருக்கும் ஹாப்பி தீபாவளி'' என வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்ந்தனர்.
Wishing you all A very Happy Diwali ? #HappyThalaDiwali#HappyDiwalipic.twitter.com/UDL4yWesPg
— Nayanthara✨ (@NayantharaU) October 24, 2022