மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில்,
தீபாவளி பண்டிகையை கொண்டாடும் இந்து சமுதாய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். அன்பும், ஒற்றுமையும், சகிப்புத்தன்மையுமிக்க நமது தேசத்தை, ஒரு தாய் மக்களாய் இணைத்து நின்று வழி நடத்த உறுதியேற்போம்.
உங்கள் அனைவரின் வாழ்விலும் வளம் பொங்கிட மீண்டும் எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.